/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கணவன், மனைவி மீது தாக்குதல் இருவர் கைது, ஒருவர் தலைமறைவு
/
கணவன், மனைவி மீது தாக்குதல் இருவர் கைது, ஒருவர் தலைமறைவு
கணவன், மனைவி மீது தாக்குதல் இருவர் கைது, ஒருவர் தலைமறைவு
கணவன், மனைவி மீது தாக்குதல் இருவர் கைது, ஒருவர் தலைமறைவு
ADDED : டிச 21, 2024 01:09 AM
கரூர், டிச. 21-
வேலைக்காக முன் பணம் வாங்கிய பணத்தை திருப்பி கேட்டதால் கணவன், மனைவியை தாக்கிய, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம் அருகே, மரவாபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 35. இவரது மனைவி தேன்மொழி, 25. இவர்கள், பழைய கட்டடங்களை இடிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.
இவர்களிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி, 45, திருமாவளவன் என்ற திருமால், 38, கார்த்திக், 36, ஆகியோர் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் மூவரும், சதீஷ்குமாரிடம் வேலை செய்வதற்கு முன்பணம் வாங்கிக் கொண்டு வேலைக்கு வராமலும், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் இருந்து வந்துள்ளனர்.
இதனால், சதீஷ்குமார், மூன்று பேரிடமும் பணத்தை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மூன்று பேரும், சதீஷ்குமாரை தாக்கியுள்ளனர். இதை பார்த்த தேன்மொழி, தனது கணவரை அறை ஒன்றில் தள்ளி பூட்டிவிட்டார். பின், தேன்மொழியை தாக்கி உள்ளனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தவுடன், மூன்று பேரும் தப்பி விட்டனர். கணவன், மனைவி இருவரும் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருமாவளவன், கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்தனர். தலை மறைவாக உள்ள ராஜபாண்டியை தேடி வருகின்றனர்.

