/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேவல் சண்டை நடத்தியஇருவர் கைது; 5 பைக் பறிமுதல்
/
சேவல் சண்டை நடத்தியஇருவர் கைது; 5 பைக் பறிமுதல்
ADDED : ஏப் 17, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., வை.புதுார் விவசாய தரிசு காட்டில், சேவல்களை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக, குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது, சேவல்கள் வைத்து சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்த, வை.புதுாரை சேர்ந்த ராஜேந்திரன், கவுண்டனுார் திவாகர் இருவரை பிடித்தனர். அங்கிருந்து மூன்று பேர் தப்பி ஓடினர். இவர்களிடமிருந்து, ஐந்து பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.