/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஏ.டி.எம்., மையத்தில் பணம் பறித்த இருவர் கைது
/
ஏ.டி.எம்., மையத்தில் பணம் பறித்த இருவர் கைது
ADDED : செப் 29, 2024 03:32 AM
குளித்தலை: குளித்தலையில், ஏ.டி.எம்., மையத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரிடம் இருந்து, 7,000 ரூபாய் பறித்து தாக்கிவிட்டு, தப்பி ஓடிய மர்ம நபர், கார் டிரைவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.
குளித்தலை, பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் இரு நாட்களுக்கு முன்பு காலை, 9:15 மணியளவில் மேட்டுமருதுார் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன், 7,000 ரூபாய் எடுத்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் பணத்தை பறித்து கொண்டு காரில் தப்பினார்.'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில், விசாரணை மேற்-கொண்ட போலீசார் திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை காந்திநகரை சேர்ந்த மதன்குமார், 35, குளித்தலை அருகே நல்-லுாரை சேர்ந்த சசிகுமார், 29, ஆகியோரை கைது செய்தனர்.
போலீசார் பிடிக்கும்போது, தப்பியோடிய இருவரும் கீழே தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும், நேற்று மதியம் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.