/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது
/
தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது
தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது
தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது
ADDED : ஜூன் 22, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே, கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், சுக்காலியூர் சாலைப்புதுார் பகுதியை சேர்ந்தவர் சேகர், 55, கூலி தொழிலாளி. இவர் கடந்த, 19ம் தேதி இரவு செல்லாண்டிப்பாளையத்தில் உள்ள, ஒரு ஓட்டல் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, சுக்காலியூரை சேர்ந்த சின்னதம்பி, 40, சாமிவளவன், 30, ஆகியோர் சேகரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 480 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து, சேகர் கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி, சின்னதம்பி, சாமிவளவன் ஆகியோரை கைது செய்தனர்.