/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கஞ்சா வைத்திருந்தஇருவருக்கு காப்பு
/
கஞ்சா வைத்திருந்தஇருவருக்கு காப்பு
ADDED : ஏப் 18, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சையத் அலி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் புலியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக புலியூர் கோவில்பாளையத்தை சேர்ந்த ராம்குமார், 30, என்பவரை கைது செய்தனர், அவரிடமிருந்து, 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதுபோல வெங்கமேடு பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், 26, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 100 கிராம் கஞ்சா பறிமுதல்
செய்தனர்.