ADDED : ஆக 18, 2026 04:55 AM
அரவக்குறிச்சி; கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சட்ட-விரோதமாக மது விற்பதாக சின்னதாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சின்னதாராபுரம் போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னதாரா-புரம் அருகே உள்ள தன்னாட்சியப்பன் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி, 55, என்பவர், அதே பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்-தனர்.
இதேபோல், சின்னதாராபுரம் அருகே, தும்பிபாடி அடுத்த ஐந்து ரோடு பகுதியில் வீட்டின் அருகே மதுவிற்ற அன்பழகன், 57, என்பவரை போலீசார் கைது செய்து, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இருவரிடமிருந்து, 9,000 ரூபாய் மதிப்-புள்ள, 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
