/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மது, குட்கா விற்ற 2 பேருக்கு 'காப்பு'
/
மது, குட்கா விற்ற 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஆக 12, 2025 01:15 AM
ப.வேலுார், பரமத்தி அருகே, பில்லுார் டாஸ்மாக் கடை அருகே, காலை, 8:00 மணிக்கே மது விற்பனை நடப்பதாக, பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பரமத்தி எஸ்.ஐ., பொன்குமார் தலைமையில் போலீசார், அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக மது விற்றுக்கொண்டிருந்த, கரூர், மேலக்கோட்டையை சேர்ந்த ராமநாதன், 40, என்பவரை கைது செய்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
* இதேபோல், ப.வேலுார் எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் போலீசார், ப.வேலுார் சுல்தான்பேட்டை பகுதிகளில் உள்ள டீ, பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ற, சுல்தான்பேட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சக்திவேல், 39, என்பவரை கைது செய்தனர்.