/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வே.பாளையம் அருகே மூதாட்டி வீட்டில் திருடிய இருவர் கைது
/
வே.பாளையம் அருகே மூதாட்டி வீட்டில் திருடிய இருவர் கைது
வே.பாளையம் அருகே மூதாட்டி வீட்டில் திருடிய இருவர் கைது
வே.பாளையம் அருகே மூதாட்டி வீட்டில் திருடிய இருவர் கைது
ADDED : ஏப் 19, 2025 02:23 AM
கரூர்:
வேலாயுதம்பாளையம் அருகே, மூதாட்டி வீட்டில் தங்க நகையை திருடியதாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுந்தராம்பாள் நகரை சேர்ந்த வீரய்யா என்பவரது மனைவி தமிழ்செல்வி, 60; இவர் கடந்த, 15ல் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து தமிழ்செல்வி, வீட்டுக்கு சென்றார். அப்போது, வீடு திறந்திருந்தது. மேலும், பீரோவில் இருந்த ஆறரை பவுன் தங்க செயினை காணவில்லை. இதுகுறித்து, தமிழ்செல்வி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, வேலாயுதம்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், தங்க நகையை திருடியது ஈரோடு மாவட்டம், கொடுமுடி சாலைப்புதுார் பகுதியை சேர்ந்த கணேசன், 46; துரைராஜ், 28; என தெரிய வந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.