/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நண்பர் வீட்டில் நகை, பணம் திருடிய இருவர் கைது
/
நண்பர் வீட்டில் நகை, பணம் திருடிய இருவர் கைது
ADDED : மே 03, 2024 07:11 AM
கரூர் : நண்பன் வீட்டில் நகை, பணம் திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.கரூர், வெங்கமேடு அருகே அருகம்பாளையம் ராஜ் நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ்,- நித்யா தம்பதி.
ரமேஷின் நண்பர்கள் அருகம்பாளையம் கவுண்டர் தெருவை சேர்ந்த மாணிக்கவாசகம், 28, வெங்கமேடு பாரதிதாசன் தெருவை சேர்ந்த கார்த்திக் 35. கடந்த, 30ல் வீட்டை பூட்டிவிட்டு நித்யா கரூர் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து மாணிக்கவாசகம், கார்த்தி ஆகியோர் வீட்டின் பீரோவில் வைத்திருந்த, 4 பவுன் தங்க நகை, 6,000 ரூபாயை திருடி சென்றுள்ளனர்.இது குறித்து, வெங்கமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் திருட்டில் ஈடுபட்ட மாணிக்கவாசகம், கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.