பத்திரத்தில் கையெழுத்து வாங்கி மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
பத்திரத்தில் கையெழுத்து வாங்கி மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
ADDED : ஜூலை 22, 2026 06:50 AM
குளித்தலை:குளித்தலை
அடுத்த போத்துராவுத்தன்பட்டி பஞ்., காக்காயம்பட்டி கிராமத்தை
சேர்ந்தவர் லோகேஷ், 29; பேக்கரி மாஸ்டர். அதே பகுதியை சேர்ந்த
தர்மலிங்கம் குடும்பத்தாருக்கும், லோகேஷ் இடையே நிலப்பிரச்னை
சம்பந்தமாக முன் விரோதம் விருந்து வந்தது. இந்நிலையில், கடந்த, 19
மாலை, 4:30 மணிக்கு காக்காயம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
அருகிலுள்ள பாலக்கட்டையில் அமர்ந்திருந்தார்.
அப்போது,
தர்மலிங் கம் மகன் பிரதீப், அவரது தாயார் மலர்விழி உறவினர்
மலையாண்டிப்பட்டியை சேர்ந்த பழனியாண்டி, வெற்றிவேல், 31,
மணிகண்டன், 27, உள்ளிட்டோர், பேக்கரி மாஸ்டரை காரில் கடத்திச்சென்று
தாக்கி, பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு,
மலையாண்டிப்பட்டி மூன்ரோடு அருகே இறக்கிவிட்டனர்.
பாதிக்கப்பட்ட பேக்கரி மாஸ்டர் லோகேஷ், குளித்தலை அரசு மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தோகைமலை போலீசார், 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வெற்றி
வேல், மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, நான்கு பேரை தேடி வருகின்றனர்.
