/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளிப்பாளையம் மூதாட்டி கொலையில் இருவர் கைது
/
பள்ளிப்பாளையம் மூதாட்டி கொலையில் இருவர் கைது
ADDED : மார் 17, 2025 04:46 AM
பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி, 90; கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்தார். நேற்று முன்தினம் காலை வீட்டில் கொலை செய்யப்-பட்டு கிடந்தார். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்-தினர். அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களான கோகுல்ராஜ், 19, தாமோதரன், 31, நகைக்காக மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மூதாட்டி சரஸ்வதியின் வீட்டருகே காலியிடம் உள்ளது. அங்கு அமர்ந்து கோகுல்ராஜ் மது குடித்துள்ளார். அப்போது மூதாட்டி தோட்டை பறிக்க வீட்-டிற்குள் சென்றுள்ளார். அவரை கீழே தள்ளி, கையால் முகத்தை பொத்தி, மற்றொரு கையால் தோட்டை கழற்றி எடுத்துள்ளார். அப்போது மூச்சுத்திணறி மூதாட்டி உயிரிழந்துள்ளார். கொக்கரா-யன்பேட்டையில் உள்ள நண்பர் தாமோதரன், 31, வீட்டுக்கு சென்று நடந்ததை தெரிவித்துள்ளார். இருவரும் தப்ப முயன்ற நிலையில், மொபைல் போன் டவரால் இருவரையும் கைது செய்தோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.