/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிரபல ரவுடி வெட்டி கொலை நண்பர்கள் இருவர் அதிரடி கைது
/
பிரபல ரவுடி வெட்டி கொலை நண்பர்கள் இருவர் அதிரடி கைது
பிரபல ரவுடி வெட்டி கொலை நண்பர்கள் இருவர் அதிரடி கைது
பிரபல ரவுடி வெட்டி கொலை நண்பர்கள் இருவர் அதிரடி கைது
ADDED : டிச 21, 2024 01:09 AM
குளித்தலை, டிச. 21-
பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை அடுத்த, மேட்டுமகாதானபுரம் கட்டளை மேட்டுவாய்க்கால் நடுக்கரையில், கடந்த 16 மாலை அரவக்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி காளிதாஸ், 32, என்பவரை மர்ம நபர்கள் தலையை துண்டித்து, உடலை மட்டும் கரையில் போட்டுவிட்டு சென்றனர்.
குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையில் மேட்டுமகாதானபுரம் பூபாலன், கம்மநல்லுார் விஷ்ணு ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். இதில், படுகொலை செய்யப்பட்ட காளிதாஸ் மற்றும் பூபாலன், விஷ்ணு ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் இருந்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு ராமநாதபுரம் மாவட்டம். திருவாடனையை சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும், காளிதாஸூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் பூபாலன், ரஞ்சித் இடையே நெருங்கிய பழக்கம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த, 16 மாலை காளிதாஸ் மற்றும் பூபாலன், விஷ்ணு, மேட்டு
மகாதானபுரம் சண்முகவடிவேல் ஆகியோர் மது போதையில் இருந்தபோது, காளிதாஸ் ரஞ்சித்தை கடுமையாக பேசியதாக தெரிய வருகிறது.
தனது நண்பரை கடுமையாக பேசியதால், ரஞ்சித் கூறியதன் பேரில் பூபாலன், 22, காளிதாஸ் தலையை வெட்டி சிதைத்துள்ளார். இந்த சம்பவத்தை சண்முகவடிவேல் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்துள்ளார் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பூபாலன், சண்முகவடிவேல் ஆகிய இருவரையும் தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பூபாலன் போலீசில் இருந்து தப்பியோடிய போது, தடுக்கி விழுந்து கால் முறிவு ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என போலீசார் தெரிவித்தனர். சண்முகவடிவேல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

