/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரவுடி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது
/
ரவுடி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது
ADDED : டிச 22, 2024 01:39 AM
குளித்தலை, டிச. 22-
மகாதானபுரத்தில், ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், நேற்று இருவர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை அடுத்த, மேட்டு மகாதானபுரம் கட்டளை மேட்டு வாய்க்கால் நடுகரையில் கடந்த, 16ல், வெட்டி படுகொலை செய்யப்பட்டு, தலை சிதைக்கப்பட்ட நிலையில் சடலத்தை கைப்பற்றி லாலாபேட்டை போலீசார் விசாரணை செய்து வந்தனர். அதில், படுகொலை செய்யப்பட்டவர் பிரபல ரவுடி காளிதாஸ் என தெரியவந்தது.
குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொலை தொடர்பாக, நேற்று முன்தினம் மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த பூபாலன், கொலையை வீடியோ பதிவு செய்த சண்முக வடிவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையை சேர்ந்த ரஞ்சித் என்ற ரஞ்சித்குமார், 30, கம்ம நல்லுாரை, 17 வயது சிறுவன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை நீதிமன்றத்தில் ரஞ்சித்குமார் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவனை, கரூர் சிறார் நீதிமன்றத்தில் அடைத்தனர்.
ரவுடி காளிதாஸ் கொலை வழக்கில், இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.