/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நங்கவரத்தில் 2 தரப்பு மோதல்: போலீசார் வழக்குப்பதிவு
/
நங்கவரத்தில் 2 தரப்பு மோதல்: போலீசார் வழக்குப்பதிவு
நங்கவரத்தில் 2 தரப்பு மோதல்: போலீசார் வழக்குப்பதிவு
நங்கவரத்தில் 2 தரப்பு மோதல்: போலீசார் வழக்குப்பதிவு
ADDED : செப் 03, 2025 02:05 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., தமிழ்ச்சோலை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 31, விவசாய கூலி தொழிலாளி. இங்குள்ள மாரியம்மன் கோவில் மற்றும் அதன் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஆக., 31 இரவு 9:00 மணியளவில் தமிழ்ச்சோலை மாரியம்மன் கோவில் முன் மணிகண்டன் பட்டாசு வெடித்தார். இதை கண்டித்து விக்னேஷ், ராகுல். 31, சபரி, 25, கருணாகரன், 30, மற்றும் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி, கற்களை கொண்டு தாக்க முயற்சித்தனர். அப்போது வந்த, மணிகண்டன் மனைவி காளீஸ்வரி, தாய் தவமணி ஆகியோரை கற்களால் தாக்கினர். இதில் பாதிக்கப்பட்ட காளீஸ்வரி, தவமணி ஆகியோர் நச்சலுார் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்றனர்.
மணிகண்டன் கொடுத்த புகார்படி, நான்கு பேர் மீது நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதே வழக்கில் பிரேம்குமார், 35, என்பவர் கொடுத்த புகார்படி மணிகண்டன், வேலவன், 26, மலையாளன், 28, ராகவன், 30, மற்றும் சிலர் மீது நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.