/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோரத்தில் இறந்து கிடந்த இரு மயில்கள்
/
சாலையோரத்தில் இறந்து கிடந்த இரு மயில்கள்
ADDED : அக் 24, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் செங்குந்தபுரம், 80 அடி சாலையில் நேற்று ஆண் மயில் இறந்து கிடந்தது. கரூர்-வெங்கல்பட்டி சுக்காலியூர் தேசிய நெடுஞ்சாலையோரம், ஒரு பெண் மயில் இறந்து கிடந்தது. மயில்கள் இறந்து, எத்தனை நாட்கள் ஆகியுள்ள என்ற விபரம் தெரியவில்லை.
தோகைக்காக மயில் வேட்டையாடப்பட்டதா அல்லது விவசாய நிலத்திற்குள் புகுந்து தொந்தரவு செய்ததால், யாராவது மயிலுக்கு விஷம் வைத்தனரா அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்ததா என தெரியவில்லை. இறந்து கிடக்கும் மயில்களை வனத்துறையினர் அகற்றுவது கூட இல்லை. இது, பறவை ஆர்வலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

