ADDED : ஏப் 25, 2026 05:17 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் போலீசார் ரோந்து சென்றபோது, சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து, 60, என்பவர் சட்டவிரோதமாக மது விற்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 4,800 ரூபாய் மதிப்புள்ள, 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
* க.பரமத்தி போலீசார், ரோந்து சென்றபோது, பள்ளமருதுபட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பழனிசாமி என்பவர், மது விற்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 4,800 ரூபாய் மதிப்புள்ள 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
