/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தண்ணீரில் அடித்து சென்ற 4 பேரை காப்பாற்றிய இருவர்
/
தண்ணீரில் அடித்து சென்ற 4 பேரை காப்பாற்றிய இருவர்
ADDED : அக் 14, 2024 05:25 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, கொத்தப்பாளையம் அமராவதி ஆற்று தடுப்பணையில், நேற்று காலை, வேலம்பாடி கிராமம், தமிழ் நகர் பகுதியை சேர்ந்த முத்தையா, 45, இதே பகுதியை சேர்ந்த சஞ்சய், 17, சபரிபாலா, 17, கேர் நகர் பகுதியை சேர்ந்த ஷேக் முகமது மீரான், 17, ஆகியோர் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்-போது தண்ணீர் வேகமாக வந்ததால், ஆற்றில் இழுத்து செல்லப்-பட்டனர். இதனை அங்கிருந்து பார்த்த கொத்தப்பாளையம் பகு-தியை சேர்ந்த ஜெகதீசன், 24, கீழத்தலையூர் பகுதியை சேர்ந்த மணி, 35, ஆகிய இருவரும், ஆற்றில் குதித்து மூவரையும் மீட்-டனர். ஆற்றில் இழுத்து சென்ற நான்கு பேரையும் காப்பாற்றிய இருவரையும், ஊர்மக்கள் பாராட்டினர்.