/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் கிடந்த மண்ணால் விபத்தில் சிக்கிய இருவர்
/
சாலையில் கிடந்த மண்ணால் விபத்தில் சிக்கிய இருவர்
ADDED : ஜூன் 12, 2025 01:25 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைந்துள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர் வந்து செல்லும் நாட்களில், ஒப்புதல் பெற நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம் வந்ததால், சாலையில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.
இதில் அடையாளம் தெரியாத லாரியில், ஏற்றி வந்த மண்ணை ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே, 100 மீட்டர் துாரம் கொட்டி விட்டு சென்றுள்ளனர். இதனால் இவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இருவர், மண் அருகே பிரேக் போட்டதால் சாலையில் விழுந்தனர். நல்வாய்ப்பாக, சாலையில் வேறு வாகனங்கள் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலையில் மண்ணை கொட்டி செல்லும், வாகனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.