/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட இரு போலீசார் 'சஸ்பெண்ட்'
/
ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட இரு போலீசார் 'சஸ்பெண்ட்'
ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட இரு போலீசார் 'சஸ்பெண்ட்'
ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட இரு போலீசார் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜன 06, 2024 11:53 AM
கரூர்: கரூர் அருகே, ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட, இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் கோபிநாத், 40, யுவராஜ், 39, ஆகியோர் தலைமை காவலர்களாக பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு, அயல்பணி என்ற பெயரில் ரோந்து வாகனத்தில் நேற்று முன்தினம் பணியில் இருந்தனர்.
கரூர்-ஈரோடு சாலை புன்னம் சத்திரம் குட்டக்கடை பகுதியில், கோபிநாத்தும், யுவராஜூம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பொதுமக்களிடம் இருவரும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டனர்.
இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கோபிநாத், யுவராஜ் ஆகிய இரண்டு பேரையும் சஸ்பெண்ட் செய்து, கரூர் எஸ்.பி., பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.