ADDED : மார் 22, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை : குளித்தலை அடுத்த, ஆலத்துார் கிராமத்தை சேர்ந்த, 16 வயது மாணவி கடந்த, 19 மதியம் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதி விட்டு, வீட்டுக்கு வரவில்லை.
பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது தங்கையை காணவில்லை என, அக்கா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.இதேபோல், தோகைமலையை சேர்ந்த பிளஸ் 2 மாணவியும் கடந்த 19ம் தேதி முதல் காணவில்லை. தனது மகளை காணவில்லையென தந்தை கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

