/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர் -லாரி மோதி வாலிபர் படுகாயம்
/
டூவீலர் -லாரி மோதி வாலிபர் படுகாயம்
ADDED : டிச 23, 2024 10:00 AM
அரவக்குறிச்சி: வேலாயுதம்பாளையம் அருகே, பஞ்சையங்கோட்டை பகுதியில், டூவீலர் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
க.பரமத்தி, மூலப்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன், 50. இவர், மூலப்பாளையத்தில் இருந்து புன்னம்சத்திரம் வழியாக சென்று கொண்டிருந்தார். பஞ்சையங்கோட்டை அருகே சென்ற போது, எதிர் திசையில் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார் காந்திநகரை சேர்ந்த விஜய், 30, என்பவர் ஓட்டி வந்த லாரி, கண்ணன் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதியது. விபத்தில் கண்ணனுக்கு படுகாயம் ஏற்பட்டதால், அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுனர் விஜய் மீது, சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

