/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர்கள் மோதியதில் ஒருவர் படுகாயம்
/
டூவீலர்கள் மோதியதில் ஒருவர் படுகாயம்
ADDED : செப் 20, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டூவீலர்கள் மோதியதில்
ஒருவர் படுகாயம்
அரவக்குறிச்சி, செப். 20-
கரூர் மாவட்டம், ஆத்துார் காயத்ரி நகர், வீனஸ் கார்டனை சேர்ந்தவர் சேதுபதி, 56. இவர் நேற்று கரூர்-சேலம் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் நாணப்பரப்பு பிரிவு அருகே சென்றபோது, சேலம் மாவட்டம், ஓமலூர், சவுடாம்பாள் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ், 39, என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் மோதியது. விபத்தில் படுகாயம் அடைந்த சேதுபதியை மீட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.