/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோரம் பரவி கிடக்கும் மணல் டூவீலர்கள் தடுமாறி விழும் அபாயம்
/
சாலையோரம் பரவி கிடக்கும் மணல் டூவீலர்கள் தடுமாறி விழும் அபாயம்
சாலையோரம் பரவி கிடக்கும் மணல் டூவீலர்கள் தடுமாறி விழும் அபாயம்
சாலையோரம் பரவி கிடக்கும் மணல் டூவீலர்கள் தடுமாறி விழும் அபாயம்
ADDED : ஏப் 07, 2025 02:23 AM
கரூர்: கரூர், கொடுமுடி நெடுஞ்சாலையில் புன்னம்சத்திரம் கடை வீதியில், சாலையோர மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர், கொடுமுடி தேசிய நெடுஞ்சாலையில், 15வது கி.மீ., தொலைவில் புன்னம்சத்திரம் கடைவீதி அமைந்துள்ளது. இங்கு, புன்னம்சத்திரம், பிரேம்நகர், பெருமாள் நகர், பெரியரங்கபா-ளையம் உள்பட பகுதிகளிலிருந்து, மக்கள் தினமும் கரூருக்கு வேலைக்கு செல்லவும், பல்வேறு பணி நிமித்தமாக வெளியூர்க-ளுக்கு சென்று திரும்பவும், இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது.
இங்குள்ள கடை வீதியில், சாலையோரம் இருபுறமும் ஏராள-மான மணல் பரவி கிடக்கிறது. சாலையில் வாகனங்களில் செல்ல திணறி வருகின்றனர்.
இரு சக்கர வாகனங்களில் வரும் பலரும், பின்னால் வேகமாக வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க நினைத்து ஒதுங்கும்போது, மணல் சறுக்கி விபத்துக்குள்ளாகின்றனர். சாலையோரம் உள்ள மணல் காற்றில் அவ்வபோது பறந்து வாகன ஓட்டிகளின் கண்-களில் விழுகிறது. எனவே, புன்னம்சத்திரம் கடைவீதி பகுதியில், இருபுறமும் சேர்ந்துள்ள மணற்பரப்பினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

