/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் அதிகரிக்கும் நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்கள்: போலீசார் நடவடிக்கை தேவை

ADDED : டிச 11, 2024 01:32 AM
கரூரில் அதிகரிக்கும் நம்பர் பிளேட் இல்லாத
டூவீலர்கள்: போலீசார் நடவடிக்கை தேவை
கரூர், டிச. 11-
கரூரில், நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும், குற்றச்சம்பவங்கள் மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுபவர்கள், நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்கள், பிரஸ் மற்றும் போலீஸ் ஸ்டிக்கர் ஓட்டிய டூவீலர்களை அதிகம் பயன்படுத்துவதாக, போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய
வந்தது. இதையடுத்து, நாள்தோறும் நம்பர் பிளேட் இல்லாமல் உள்ள டூவீலர்களை நிறுத்தி, சோதனை செய்யுமாறு, போலீசாருக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். கரூரில் போலீசார், சில நாட்கள் சோதனையிட்டனர். அதன் பின், சோதனை என்பது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்கள் அதிகம் உலா வருகிறது. அதை, போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், வழிப்பறி
மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்களை ஓட்டுபவர்களிடம், பதிவெண் சான்று உள்ளதா என, போலீசார் ஆய்வு செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில், நம்பர் பிளேட் பொருத்த அறிவுறுத்த வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்க, போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் -
ஒழுங்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.