/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆசிரியையிடம் மொபைல் திருடிய இரு பெண்கள் கைது
/
ஆசிரியையிடம் மொபைல் திருடிய இரு பெண்கள் கைது
ADDED : ஜன 22, 2025 07:15 AM
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், உடற்கல்வி ஆசிரியையிடம், மொபைல் போன் திருடியதாக, இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கரூர் எல்.என்.எஸ்., போஸ்ட், திருகாம்புலியூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி தேன்மொழி, 44. இவர், தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளி யில், உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 20 மாலை, இவர் கரூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்.அப்போது, சென்னை ஆவடியை சேர்ந்த செல்வா, 40, செல்வி, 35, ஆகிய இரண்டு பெண்கள், தேன் மொழியின் மொபைல் போனை திருடியுள்ளனர். இது குறித்து, தேன்மொழி கொடுத்த புகார்படி, செல்வா, செல்வி ஆகிய இரண்டு பெண்களை, கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.