/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கத்தியை காட்டி பணம் பறித்த இரு வாலிபர் கைது
/
கத்தியை காட்டி பணம் பறித்த இரு வாலிபர் கைது
ADDED : ஜன 22, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 44, கூலி தொழிலாளி. இவர் கடந்த, 20ல், கரூர் சர்ச் கார்னர் பகுதியில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த தமிழழகன், 30, கன்னார சந்து பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார், 22, ஆகியோர் கார்த்திகேயனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 700 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து, கார்த்திகேயன் அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரித்து தமிழழகன், சஞ்சய்குமார் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.