கத்தியை காட்டி பணம் பறிப்பு இரண்டு வாலிபர்கள் கைது
கத்தியை காட்டி பணம் பறிப்பு இரண்டு வாலிபர்கள் கைது
ADDED : மே 23, 2026 05:54 AM
குளித்தலை ஊகுளித்தலை அருகே, கத்தியை காட்டி பணம் பறித்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை அடுத்த லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் சந்தானம், 26. இவர் நேற்று முன்தினம் மாலை, 5:30 மணியளவில் லாலாபேட்டை காவிரி ஆற்று படுகை பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது கீழ சிந்தலவாடியை சேர்ந்த விஜய், 26, என்பவர் தகாத வார்த்தையால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி, 50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.
அப்போது பாக்கெட்டில் இருந்த, 20 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். பின்னர் சந்தானம் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் விஜயை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.
* மேல குட்டப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர், 25, விவசாய தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் மாடு விழுந்தான் பாறை பஸ் ஸ்டாப் அருகே சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்லமுத்து, 35, என்பவர் வழி மறித்து கத்தியை காட்டி, 5,000 ரூபாய் கேட்டு மிரட்டினார். பின்னர், பாக்கெட்டில் இருந்த, 1,000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினார்.
இது குறித்து சுதாகர் கொடுத்த புகாரின்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிந்து செல்லமுத்துவை கைது
செய்தனர்.
