/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி அருகே வழிப்பறி இரண்டு வாலிபர்கள் கைது
/
க.பரமத்தி அருகே வழிப்பறி இரண்டு வாலிபர்கள் கைது
ADDED : மே 08, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், க.பரமத்தி அருகே, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட, இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
க.பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த மாதம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பு, பணம் வழிப்பறி ஆகிய சம்பவங்கள் நடந்தன. இதுகுறித்து, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அப்போது, வழிப்பறி சம்பவங்களில் கரூர் மாவட்டம், கடவூர் கவுண்டப்பட்டி பகுதியை சேர்ந்த தங்க ரத்தினம், 26; மைலம்பட்டி சங்கி பூசாரியூர் பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா, 20; என தெரியவந்தது. இதையடுத்து, க.பரமத்தி போலீசார், இரண்டு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

