வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 21, 2026 11:09 AM
கரூர்: வேலை வாய்ப்பு இல்லாதவர்கள், அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரி-வித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப-தாவது: கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பதிவு செய்து எந்த வேலையும் கிடைக்-காமல், 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்க-ளுக்காக மாதந்தோறும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய், மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 ரூபாய், பட்டதாரிக-ளுக்கு, 600 ரூபாய் வீதம், மூன்றாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்-தொகை மாதந்தோறும், 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 600 ரூபாய், மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய் மற்றும் பட்டதாரிகளுக்கு, 1,000 ரூபாய் வீதம், 10 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகி-றது. இந்த திட்டத்தில் தகுதியுடையவர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
