/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல்
/
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல்
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல்
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல்
ADDED : டிச 06, 2024 07:22 AM
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் ஏராளமானவர்கள் ஓட்டளித்தனர்.
ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும், போராடுவதற்கும் ஏராளமான தொழிற்சங்கங்கள் உள்ளன. ஆனால் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்கள் மட்டுமே, மத்திய அரசுடன் நேரடியாக பேச்சு நடத்த முடியும். இந்த தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதற்காக தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த, 11 ஆண்டுகளாக ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.இந்நிலையில் ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு டிச., 4 முதல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று நடந்த தேர்தலில், டி.ஆர்.இ.யு., -- டி.ஆர்.கே. எஸ்.-- ஆர்.எம்.யு.,-- எஸ்.ஆர்.இ.எஸ்.,-- எஸ்.ஆர்.எம்.யு., ஆகிய ஐந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன.
கரூரில், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், ஒரு அறையில் ஓட்டுச்சாவடிக்கு ஏற்பாடு செய்-யப்பட்டிருந்தது. அதில், ஊஞ்சலுார் முதல் திருச்சி கோட்டை வரையிலும், நாமக்கல்லில் இருந்து கரூர் வரையிலும், கரூரில் இருந்து திண்டுக்கல், குளத்துார் வரை உள்ள ரயில்வே ஸ்டேஷன்-களில் பணிபுரியும், 832 ஊழியர்கள் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர். இரண்டாம் நாளான நேற்று, ஏராளமான ரயில்வே ஊழியர்கள் வரி-சையில், நின்று ஓட்டு போட்டனர். ஓட்டு எண்ணிக்கை வரும், 12ல் நடக்கிறது. கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் நடந்த, ஓட்-டுப்பதிவையொட்டி, ரயில்வே போலீசார், கரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.