ADDED : மே 10, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாநகர ஐக்கிய ஜமாஅத் சார்பில், தலைவர் நிஜாம்பாபு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாருல் உலுாம் சவூதிய்யா அரபிக் கல்லுாரி முதல்வர் சிராஜூதின் அஹமது ரஷாதி, துணைத்தலைவர் ஷபியுல்லாகான், செயலாளர் செய்யது முஸ்தபா, நிர்வாகிகள் ஹக்கீம் பாஷா, ஜபருல்லா உள்பட பலர் பங்கேற்றனர்.