ADDED : ஆக 24, 2026 06:01 AM
கரூர்:கரூர்
மாவட்டம், காதப்பாறை பஞ்சாயத்து வெண்ணை மலை பகுதியில், மாவட்ட வேலை
வாய்ப்பு அலுவலகம், கரூர் பஞ்., யூனியன் அலுவலகம், தொழிலாளர் நல
வாரிய அலுவலகம் மற்றும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி
கோவிலும் உள்ளது. மேலும், அப்பகுதியில் ஏராளமான வீடுகளும் உள்ளன.
இதனால்,
வெண்ணைமலை பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் வசதிக்காக
மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதன் மூலம் அந்த பகுதியை
சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
இந்நிலையில், மேல்நிலை குடிநீர் தொட்டி போதிய பராமரிப்பு இல்லாமல்
உள்ளது.
மேல்நிலை குடிநீர் தொட்டியை சுற்றி, முட்புதர்கள்
அதிகளவில் முளைத்துள்ளது. எனவே, வெண்ணைமலையில் உள்ள மேல்நிலை
குடிநீர் தொட்டியை பராமரிப்பு செய்ய, காதப்பாறை பஞ்சாயத்து
நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
