/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அகற்றப்படாத முதல்வர் படம்
/
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அகற்றப்படாத முதல்வர் படம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அகற்றப்படாத முதல்வர் படம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அகற்றப்படாத முதல்வர் படம்
ADDED : மார் 20, 2024 01:42 AM
கரூர்:கரூர் கலெக்டர் அலுவலகத்தில், முதல்வர் ஸ்டாலின் படம் உள்ள சுவரொட்டிகள்
அகற்றப்படாமல் உள்ளது.
தமிழகத்தில்,
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்.,19ல் நடக்கிறது. கடந்த மார்ச்,
16ல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தால், அரசு அலுவலகங்களில்
முதல்வர், அமைச்சர்கள் படங்கள் மற்றும் அரசின் சாதனை விளக்க படங்களை
ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு
அலுவலகங்களில் முதல்வர், அமைச்சர்கள் உருவம் பதிக்கப்பட்ட
விளம்பரங்கள், அறிவிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. சுவர்
விளம்பரங்கள், சுவரொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டன. கட்சி கொடி
நிறத்தில் எழுதப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பெயர் பலகைகள்,
முதல்வர் படத்துடன் கூடிய அரசு விளம்பர போர்டுகள் துணிகள் கொண்டு
மறைக்கப்பட்டன.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மகளிர் உரிமை
திட்டம் குறித்த முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கூறிய விளம்பர சுவரொட்டி
அகற்றப்படாமல் உள்ளது. மேலும் பல அரசு அலுவலகங்களில், முதல்வர்
படம் மறைக்கப்படாமல் உள்ளது. இதை மறைக்க அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

