ADDED : செப் 04, 2026 06:18 AM
குளித்தலை;தோகைமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா கூறியதாவது:
தோகைமலை
வட்டாரத்தில், நடப்பாண்டு காரீப் பருவத்திற்கான மின்னணு பயிர்
கண்கெடுப்பு பணி, வேளாண்மை துறை சார்பாக ஜுலை 1 முதல் நடந்து
வருகிறது. தோகைமலை வட்டாரத்தில் உள்ள, 21 வருவாய் கிராமங்களில்
கணக்கெடுப்பு செய்ய தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். மின்னணு
பயிர் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள, ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்த
தெரிந்த ஆர்வமுள்ள விவசாயிகள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் பங்கு
பெறலாம்.
இவ்வாறு பயிர் கணக்கெடுப்பு செய்வதால், பயிர் சாகுபடி
பரப்புக்கு ஏற்றவாறு விவசாயிகளுக்கு எளிதில் அரசு மானியங்கள்,
பயிர் கடன், பயிர் காப்பீடு, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பீடு
வழங்க இயலும். விவசாயிகள் தங்களது வயலில் சாகுபடி செய்துள்ள
பயிர்களை, தாங்களாகவே பதிவு செய்வதற்கு, 'நம்ம வயல்' செயலி
உருவாக்கப்பட்டுள்ளது. நம்ம வயல் செயலியில், உள் நுழைந்தவுடன்
விவசாய அடையாள எண்ணில் பதிவு செய்துள்ள சர்வே உட்பிரிவுகளை
பார்க்கலாம். இதன் மூலம் தங்களுடைய நிலத்தின் சர்வே எண், உட்பிரிவு
எண் விடப்பட்டு இருந்தால், உடனே தோகைமலை வேளாண் உதவி இயக்குநர்
அலுவலகத்தை அணுகலாம்.
ஊக்க தொகை எவ்வளவு
ஒவ்வொரு சர்வே
உட்பிரிவுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதாவது தரிசு நிலத்தை
பதிவு செய்ய ஒரு சர்வே உட் ரிவுக்கு ரூ.3ம், ஒரு சர்வே உட்பிரிவில் ஒரே
ஒரு பயிர் மட்டும் இருந்து பதிவு செய்தால் ரூ.5ம், அதே சர்வே உட்பிரிவில்
கூடுதல் ஒவ்வொரு பயிருக்கும் ரூ.2 (அதிக
பட்சமாக ஒரு
உட்பிரிவுக்கு ரூ.9 வரை), மற்றும் மலைபாங்கான கிராமங்களுக்கு ஒரு
உட்பிரிவுக்கு ரூ.10ம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர்
கூறினார்.
