sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'ஊரக கண்டுபிடிப்பாளர் விருது': ஆக., 31க்குள் விண்ணப்பிக்கலாம்

/

'ஊரக கண்டுபிடிப்பாளர் விருது': ஆக., 31க்குள் விண்ணப்பிக்கலாம்

'ஊரக கண்டுபிடிப்பாளர் விருது': ஆக., 31க்குள் விண்ணப்பிக்கலாம்

'ஊரக கண்டுபிடிப்பாளர் விருது': ஆக., 31க்குள் விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூன் 01, 2024 06:21 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : 'ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து, பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில், இரு சிறந்த கிராமப்புற பகுதியை சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு, 2018-19 முதல் ஆண்டுதோறும், தலா, ஒரு லட்சம் ரூபாய் வீதம், இரண்டு லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு, 2024-25ம் ஆண்டிற்கான, 'ஊரக கண்டுபிடிப்பாளர் விருது'க்கான விண்ணப்பங்களை, அறிவியல் நகரம் வரவேற்கிறது. விண்ணப்ப படிவம், விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல் குறிப்புகள் ஆகியவற்றை அறிவியல் நகர இணையதளம் www.sciencecitychennai.in-ல் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கலெக்டர் மூலம் அறிவியல் நகரத்திற்கு, வரும், ஆக., 31க்கு முன் வந்து சேரும் வகையில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us