/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கள்ளப்பள்ளி சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல்
/
கள்ளப்பள்ளி சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல்
கள்ளப்பள்ளி சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல்
கள்ளப்பள்ளி சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல்
ADDED : மே 12, 2025 03:25 AM
கரூர்: கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த, கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி பஞ்சாயத்து பகுதியில், கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கள்ளப்-பள்ளி, சிந்தலவாடி, புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, லாலாப்-பேட்டை, பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, மகாதா-னபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெறு-கின்றனர். தினமும், 50 பேருக்கு மேற்பட்டவர்கள் வந்து செல்-கின்றனர்.
குழந்தைகள் மருத்துவம், கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை மற்றும் இதர பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகளவில் மக்கள் வந்து செல்வதால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் வசதி தேவைப்படுகிறது. எனவே, தரம் உயர்த்தி கூடுதல் வசதி செய்து தர வேண்டும். என, மக்கள் வலியுறுத்தி வருகின்-றனர்.