/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பரளி குகை வழிப்பாதை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
பரளி குகை வழிப்பாதை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பரளி குகை வழிப்பாதை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பரளி குகை வழிப்பாதை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 07, 2025 04:06 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி கருங்க-ளாப்பள்ளி நெடுஞ்சாலையில், பரளி ரயில்வேகேட்டில் கடந்த மாதம், குகை வழிப்பாதை பணி தொடங்கியது. நெடுஞ்-சாலையில் இருபுறமும் விவசாய நிலம் என்பதால், தண்ணீர் ஊற்-றெடுக்கிறது. இதனால், குகை வழிப்பாதை பணி தொடங்கி-யதில் இருந்து தண்ணீரில் தேங்கி வருகிறது.
தேங்கிய தண்ணீரை வெளியேற்றி, குகை வழிப்பாதை பணியை விரைந்து முடித்து, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்திய நெடுஞ்சாலையை மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பரளி கிராம மக்கள், சேலம் ரயில்வே கோட்ட பொது மேலா-ளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.