/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தடுப்பூசி செலுத்திய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
/
தடுப்பூசி செலுத்திய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தடுப்பூசி செலுத்திய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தடுப்பூசி செலுத்திய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ADDED : மே 27, 2025 01:34 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, தடுப்பூசி செலுத்திய நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கரூர் மாவட்டம், கத்தாளப்பட்டி அருகே உள்ள சின்னதாதம்பாளையத்தை சேர்ந்தவர் முனியப்பன், 35. இவரது 4 மாத குழந்தை நித்ராவுக்கு கடந்த, 21ம் தேதி மன்மாரி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதையடுத்து குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை, அரவக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தைக்கு காய்ச்சல் குணமடையாததால், குழந்தையை கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர் சிகிச்சை சிகிச்சை பெற்று வந்த, நான்கு மாதமே ஆன குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து, குழந்தையின் தந்தை முனியப்பன் அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.