ADDED : டிச 26, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்து, வாஜ்பாய் உருவப்ப-டத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல்முருகன், மாவட்ட பொதுச்செயலர் உமாதேவி, சாமிதுரை, மாவட்ட செயலர் முருகேசன், பொருளாளர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

