ADDED : அக் 30, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் அருகே, டூவீலர் மீது வேன் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.
கரூர்
மாவட்டம், வடக்கு காந்தி கிராமம், இரண்டாவது கிராஸ் பகுதியை
சேர்ந்தவர் ஹரீஸ் பாண்டியன், 31; இவர் கடந்த, 29ல் கரூர் அருகே
பசுபதிபாளையம், அமராவதி ஆற்றுப்பாலத்தில், டி.வி.எஸ்., சுசூகி
டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக சென்ற ஆம்னி வேன், டூவீலர் மீது மோதியது. அதில், அதே இடத்தில் ஹரீஸ் பாண்டியன் உயிரிழந்தார்.பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

