ADDED : செப் 30, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, டூவீலர் மீது வேன் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 58; இவர் கடந்த, 28ல் டி.வி.எஸ்., மொபட்டில், சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை, பெரியகுளத்துப்பாளையம் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கரூர் மாயனுார் பகுதியை சேர்ந்த சுதன், 21; என்பவர் ஓட்டி சென்ற வேன், ராமசாமி மீது மோதியது. அதில், கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த ராமசாமி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.