/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாங்கல்-மோகனுார் பாலத்தின் மேல் தளம் சேதத்தால் பீதி
/
வாங்கல்-மோகனுார் பாலத்தின் மேல் தளம் சேதத்தால் பீதி
வாங்கல்-மோகனுார் பாலத்தின் மேல் தளம் சேதத்தால் பீதி
வாங்கல்-மோகனுார் பாலத்தின் மேல் தளம் சேதத்தால் பீதி
ADDED : டிச 23, 2024 10:01 AM
கரூர்: வாங்கல் - மோகனுார் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் மேல் தளத்தில், பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பீதியில் செல்கின்றனர்.
கரூர் மாவட்டம் வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனுார் பகுதிகளை இணைக்கும் வகையில் கடந்த, 2006-11ல், தி.மு.க., ஆட்சியின் போது பணி கள் துவக்கப்பட்டது. பிறகு, அ.தி.மு.க., ஆட்சி மாறிய நிலையிலும், பாலம் கட்டும் பணிகள் தொடர்ந்து நடந்தது. இறுதியாக, 43 கோடியே, 50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட, உயர்மட்ட பாலத்தை கடந்த, 2015 பிப்., 14ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பாலத்தை கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த, பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாலத்தின் மேல் தளத் தில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. சிமென்ட் கலவைகள் உதிர்ந்து, ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகின்றன. பாலத்தின் மேல் தளத்தின் இணைப்புகளில் உள்ள, இரும்பு கம்பிகளும் பெயர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, பாலத்தின் மேல் தளத்தில் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சரி செய்ய, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

