/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வி.ஏ.ஓ., உதவியாளர் காலி பணியிட தேர்வு
/
வி.ஏ.ஓ., உதவியாளர் காலி பணியிட தேர்வு
ADDED : டிச 07, 2025 04:32 AM
குளித்தலை: குளித்தலை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், குளித்தலை வட்டத்தில் காலியாக உள்ள, ஐந்து கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்தது.இந்த தேர்வுக்கு, 450 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதி அடிப்படையில், 388 பேருக்கு, 'ஹால் டிக்கெட்' அனுப்பப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு நடந்த தேர்வில், 313 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு அறையில், குளித்தலை தாசில்தார் இந்துமதி ஆய்வு செய்தார். உடன், மண்டல துணை தாசில்தார் தீபத்திலகை, துணை தாசில்தார் நீதிராஜன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ஜெயவேல் காந்தன், ஆர்.ஐ.,கள் தமிழரசி, அரவிந்தன், சுகப்பிரியா மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் உடனிருந்தனர். குளித்தலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

