/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் வி.ஏ.ஓ., சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
கரூரில் வி.ஏ.ஓ., சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 20, 2024 02:32 AM
கரூர்: கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம நடந்தது.
நிர்வாகி நாகமணிகண்டன் தலைமை வகித்தார். 2023-24ல் ரபி பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளுக்கு ஒதுக்கியுள்ள நிதி, வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் நடத்த பேச்சுவார்த்தைக்கு எதிராக உள்ளது. டிஜிட்டல் பயிர் சர்வே பணிக்கு சிறப்பு பணியாளர்களை நியமனம் செய்து, மற்ற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்நிலை இல்லை. எனவே, டிஜிட்டல் பயிர் சர்வே பணியை புறக்கணிப்பு செய்கிறோம் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் செந்தில்குமார், தன்ராஜ், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.