/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வி.ஏ.ஓ., சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
/
வி.ஏ.ஓ., சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 31, 2025 06:08 AM
கரூர்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில், கலெக்டர் அலுவ-லகம் முன், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்-தது.
அதில், கிராம நிர்வாக அலுவலகங்களில் குடிநீர், இணையதள வசதியை செய்து தர வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வி தகுதியை பட்டப்படிப்பு என மாற்ற வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு, சிறப்பு கிராம நிர்வாக அலுவலர் என, பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், செயலாளர் பிரபு, பொருளாளர் ராஜ்கமல், ஒருங்கிணைப்பாளர் மோகன் ராஜ் உள்-பட, பலர் பங்கேற்றனர்.

