sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலையில் வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

/

குளித்தலையில் வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

குளித்தலையில் வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

குளித்தலையில் வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 18, 2026 07:41 AM

Google News

ADDED : பிப் 18, 2026 07:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், குளித்தலை வட்ட கிளை சார்பில், காவல் துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். விருது

நகர் மாவட்டம், சிவகாசி வட்டம் திருத்தங்கல் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட, ஈஞ்சார் வி.ஏ.ஓ., தியாகராஜன் மற்றும் கிராம உதவியாளர் ராஜாமுத்துப்பாண்டி ஆகியோரை கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளான கூடலிங்கம், அவரது மகன் செல்லமுத்துவை கைது செய்யாமல், மெத்தன போக்குடன் செயல்பட்டு வரும் போலீசாரை கண்டித்தும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கான சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிட கோரியும், கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us