/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க.,வில் இணைந்த பல்வேறு கட்சியினர்
/
தி.மு.க.,வில் இணைந்த பல்வேறு கட்சியினர்
ADDED : நவ 11, 2024 07:55 AM
கரூர்: கரூர் மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், அ.தி.மு.க., பா.ஜ.,வினர் இணையும் விழா, நேற்று நடந்தது. அதில், கரூர் மாவட்ட தி.மு.க., செயலாளரும், மின் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி முன்னிலையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., துணைத்தலைவர் சக்திவேல், வார்டு பிரதிநிதிகள் ரஞ்சித் குமார், ராஜேஷ்குமார், அன்பு உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இணைந்தனர்.
அதேபோல், கரூர் மாவட்ட, பா.ஜ., முன்னாள் இளைஞரணி தலைவர் கணேச மூர்த்தி தலைமையில், 20க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இணைந்தனர். அப்போது, மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் பாபு, தான்தோன்றிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட, தி.மு.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.