/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : செப் 01, 2025 04:17 AM
கரூர்: கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், பல்வேறு கட்சியினர் இணைப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில், மாவட்ட செயலரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி முன்னிலையில் தே.மு.தி.க.,வை சேர்ந்த மாவட்ட அவைத்தலைவர் முருகன் சுப்பையா, மாவட்ட துணை செயலர் பெரி-யண்ணன், மாவட்ட இளைஞரணி செயலர் துளசி
மணி உள்பட, 21 பேர், அக்கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைத்துக்கொண்டனர்.
தொடர்ந்து, ஆண்டாங்கோவில் மேல்பாகம் பஞ்.,ல், அ.தி.மு.க.,-பா.ஜ., சேர்ந்த, 34 பேர் தி.மு.க.,வில் இணைந்-தனர். கரூர் கிழக்கு ஒன்றியம், சோமூர் பஞ்.,ல், அ.தி.மு.க.,-பா.ம.க.,- த.வெ.க., என மாற்றுக்கட்சியினர், 18 பேர், கரூர் மேற்கு பகுதியை சேர்ந்த, த.வெ.க., சேர்ந்த, 58 பேர் இணைந்தனர். கரூர் மாநகராட்சி பகுதி செயலர் பாண்டியன் உள்-பட பலர் உடனிருந்தனர்.