/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமித்ஷா உருவ பொம்மையை எரித்து வி.சி.க., போராட்டம்
/
அமித்ஷா உருவ பொம்மையை எரித்து வி.சி.க., போராட்டம்
ADDED : டிச 22, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், டிச. 22-
அம்பேத்கரை அவதுாறாக பேசியதாக கூறி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கரூர் தலைமை தபால்நிலையம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பதவியில் இருந்து விலக்க வேண்டும். தேசிய தலைவர்களை அவமதித்ததற்காக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். பின், அமித்ஷா உருவ பொம்மையை எரித்து, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.