/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீரராக்கியம் பகுதி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் அவதி
/
வீரராக்கியம் பகுதி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் அவதி
வீரராக்கியம் பகுதி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் அவதி
வீரராக்கியம் பகுதி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் அவதி
ADDED : டிச 22, 2024 01:17 AM
கரூர், டிச. 22-
கரூர் மாவட்டத்தில், நேற்று அதிகாலை பெய்த கன மழையால், வீரராக்கியத்தில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
கரூர் மாவட்டம் மாயனுார், கிருஷ்ணராயபுரம், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பாலராஜபுரம் பஞ்சாயத்தில் உள்ள வீரராக்கியம் பகுதியில், 20-க்கும் மேற்பட்ட கடை, வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து சூழ்ந்து நின்றது. இதனால் அப்பகுதி மக்கள், வீடுகளை விட்டு வெளியே செல்ல அவதிப்பட்டனர். இங்கு வடிகால் வசதியில்லாததால், மழைக்காலங்களில் கன மழை பெய்தால், 10க்கும் மேற்பட்ட வீடுகளை தொடர்ந்து தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பின்னர், பஞ்., நிர்வாகம் சார்பில் இரண்டு பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி, வடிகால்கள் மூலம் மழை வெள்ளம் வடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் தெற்குகளம் பகுதியில் ராஜலிங்கம், வைரமூர்த்தி ஆகிய இருவரின் வீடுகள், இரு மாட்டு கொட்டகைகளில் மழை வெள்ளம் புகுந்ததில் இரு ஆடுகள் அடித்து செல்லப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், நேற்று காலை, 8.00 மணி வரை பதிவான மழையளவு மி.மீட்டரில்: மாயனுார், 47.40, கிருஷ்ணராயபுரம், 33.30, கரூர், 29.40, பஞ்சப்பட்டி 18.20, குளித்தலை, 13.40, மைலம்பட்டி, 2, என மொத்தம், 143.70 மி.மீ., மழை பெய்தது. சராசரியாக, 11.98 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.